விருத்தாசலம் பழமலைநாதர் கோவில் வரலாறு கூறும் நுால். விருத்தாசலத்துக்கு திருமுதுகுன்றம் என்ற பெயர் இருந்தது என்றும், இவ்வூரின் சிதிலமடைந்த சிவன் கோவிலை, விபசித்து முனிவர் திருப்பணி செய்ததும் கூறப்பட்டுள்ளது.
சிறுவனாக வந்த பாலகனே, பின்னாளில் விபசித்து முனிவர் என்றும், இவருக்கு விபூதி சித்தர் என்ற பெயர் இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. திருப்பணி செய்தவர்களுக்கு ஊதியமாக கொடுத்த வன்னிய மரத்தழைகள், பொற்காசுகளாக மாறியதாக கூறப்பட்டுள்ளது. விருத்தாசலம் நகரில் மணிமுத்தாற்றில் தான் --புண்ணியமேடு இடத்தில்- முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், ஆத்மா சாந்தியடையும் என்ற செய்தி இடம்பெற்றுள்ள நுால்.
–டாக்டர் கலியன் சம்பத்து