ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் யோக நிலை, ஞானநிலை மூலமாகப் பெற்ற யந்த்ர மந்த்ரங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ள நுால். யந்த்ர மந்த்ரங்களை பிரயோகிப்போர் உடல், உள்ளம் துாய்மையுடன் செயல்பட வலியுறுத்துகிறது. யந்த்ரங்களை வரைந்து, வேண்டிய பீஜ மந்த்ரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. சுரம் தணிக்க யந்த்ரம், காமாலை போக்க யந்த்ரம், சாவைத் தடுக்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய யந்த்ரம், கருக்காப்பு யந்த்ரம், குழந்தை தோஷம் நீக்கும் யந்த்ரம், ஸர்ப்ப பயம் போக்கும் யந்த்ரம் என விளக்கம் தருகிறது.
பீஜ மந்த்ரத்தை எத்தனை முறை ஜபிக்க வேண்டும் என்ற வரைமுறைகளை விளக்கும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்