இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இந்தியாவின் தென்பகுதியில் நடத்திய படையெடுப்புகள் பற்றி விவரிக்கும் நுால். தகுந்த ஆதாரங்களுடன் படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோழப் பேரரசின் வீழ்ச்சியில் துவங்கி, தக்காண பகுதியில் முகமதிய படையெடுப்புகள், கில்ஜி ஆட்சியில் நடந்த அழிவுகள், துக்ளக் படையெடுப்புகள் என விரிகிறது.
படையெடுப்புகளால் தென் மாநிலங்களில் நடந்த அழிவு மற்றும் மாற்றங்களை விரிவாக கூறுகிறது. பிற்சேர்க்கையாக கல்வெட்டு தகவல்கள் தரப்பட்டுள்ளன. இந்தியாவின் தென் மாநிலங்களில் இபின் பதுாதாவின் பயணம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. கில்ஜிகளின் பூர்வீகம் பற்றிய ஆய்வு தகவல்களும் தனியாக தரப்பட்டுள்ள நுால்.
– ராம்