பிராமண இன மக்கள் வாழும் சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டு உள்ள நாடக நுால். பாசமுடன் வளர்க்கும் கழுதையை பூர்வீக கிராமத்துக்கு கொண்டு வந்து, அதை பேணிப் பாதுகாப்பதில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கிறது. இதனால் வரும் பிரச்னைகள் பற்றி தெளிவாக பேசுகிறது.
வீட்டில் வேலை செய்யும் பெண் தவிர, கிராமத்தில் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது வலுத்து, கிராம பெரியவர்கள் இணைந்து கழுதையை அங்கிருந்து விரட்டிவிடுகின்றனர். பின், அது கொலை செய்யப்படுகிறது.
அந்த கொலை பற்றிய பயம் நம்பிக்கையாக உருவெடுத்து, கழுதைக்கு கோவில் எழுப்பும் நிகழ்வு வரை நடக்கிறது. வாழ்க்கை குறியீடுகளை உள்ளீடாகக் கொண்டு சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை நாடக நுால்.
– ராம.குருநாதன்