கம்பன் படைத்த பாத்திரங்களை மாறுபட்ட கோணத்தில் அறிமுகம் செய்து உள்ள நுால். கம்பராமாயணம் பற்றி ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. தாடகை, ராவணன், பரதன், இலக்குவன், சீதை பாத்திரங்களில் முழுமையை காண முடிகிறது. கம்பனில் சித்தர் நெறி பற்றி விரிவாகப் படைக்கப்பட்டுள்ளது.
சித்தர் என்ற சொல்லுக்கு அறிவு வடிவானவர் என்னும் பொருள் பொருந்தும் வகையில் அமைந்து உள்ளது. ராமனுக்குத் தொண்டு செய்வதை நோக்கமாகக்கொண்ட இலக்குவன், வேறு பல வகைகளிலும் நுட்பமான அறிவுத் திறனை வெளிப்படுத்தியது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தசரதனின் சறுக்கல்கள் நயமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கம்பராமாயணத்தில் ஆழ்ந்து எடுத்த முத்துகளால் கோர்க்கப்பட்ட மாலை.
– முகிலை ராசபாண்டியன்