சினிமாவை புரிந்து கொள்வதன் மூலம் சமூகத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற மையக்கருத்தை முன் வைக்கும் நுால்.
தமிழ் சினிமாவில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் அரசியல் துவங்கி, காக்கா முட்டை, கொடி, தர்பார், கர்ணன், விசாரணை உள்பட, 50க்கும் மேற்பட்ட படங்கள் சொல்ல வரும் சேதி என்ன, அதிலுள்ள நியாயங்கள், அபத்தங்கள் அலசப்பட்டுள்ளன. படங்களில் உள்ள காட்சிகள், வசனம், பாத்திரங்கள், குறியீடுகள் உணர்த்த வரும் தகவல் என்ன, அவை இந்த சமூக மேம்பாட்டிற்கு உதவுமா என்பதை நுட்பமாக விவரித்துள்ளது. தீவிர சினிமா ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது.
படைப்போடு சேர்த்த விமர்சனத் தொகுப்பு, இவர் எத்தகையவர் என்பதை பறைசாற்றும் நுால்.
- – பெருந்துறையான்-