ராஜா தேசிங்கு குறித்த நாடோடிப் பாடல்களை மூலமாக வைத்து, எழுதப்பட்ட நாடக நுால்.
டில்லியில் இருந்தபடி, 56 குறுநில தேசங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாஷாவுக்கு, தமிழகத்தில் செஞ்சிக்கோட்டை குறித்த தகவல் கிடைக்கிறது.
அந்த நேரத்தில், கொங்கு பகுதி பக்கிரி ஒருவன் அற்புத குதிரையை, பாஷாவிற்கு பரிசளிக்க வருகிறான்.வரம் பெற்றவரால் மட்டுமே அந்தக் குதிரையில் பயணிக்க முடியும் என்பதை கேட்டு, பாஷா ஆவேசம் அடைகிறான்.
அப்போது, குதிரையை அடக்கும் போட்டியில் தோற்கும் செஞ்சி அரசன், சிறைப்படுகிறான். இவனது ஐந்து வயது மகன் தேசிங்கு ராஜன், குதிரையை அடக்கி, தந்தையை மீட்டு திரும்புகிறான். பாஷாவின் மகளை மணப்பதாக காட்சி நிறைவடைகிறது.
–- பெருந்துறையான்-