பாரம்பரிய கல்வியின் வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரைக்கும் நுால். அடிப்படைக் கல்வி அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடாது; அது உயர் கல்வியானது மேல்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்பது தான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.
இந்தியாவில் பயன்படுத்திய கலப்பை, ஐஸ் தயாரிக்கும் முறை, எக்கு தயாரிப்பு முறை, கட்டடங்கள் கட்டும் முறை, அதற்கு பயன்படுத்திய பொருட்கள், தொழில் துறைகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் என, தொழில்நுட்பத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறது.
ஆங்கிலேயர் வருவதற்கு முன், தன்னிறைவு பெற்றிருந்த இந்திய விவசாயத்துறை பெரும் சரிவைச் சந்தித்தது என்பதை உரைக்கும் நுால்.
–- இளங்கோவன்