கம்ப ராமாயணத்தை உள்வாங்கி, கருத்து மாறாமல் மரபுக் கவிதையில் வடிக்கும் நுால். எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கவிதைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் அருஞ்சொல் விளக்கம் பயன் தருகிறது.
சீதையை ராமனுக்கு மணம் செய்து கொடுத்தான் ஜனகன். அக்காட்சியை, ராமனின் தாமரை போன்ற கையில் ஜானகியை மனம் உவந்து நல்ல நீரால் தாரை வார்த்தான் என விளக்குகிறது. இலங்கை வந்து மீட்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என்று அனுமனிடம், சீதை கூறிய வார்த்தைகள் உருக வைக்கும்.
தர்மத்தை நிலை நிறுத்த எடுத்த பரசுராம அவதாரம் பற்றி விரிவாகக் கூறியுள்ளது. ராமனின் வம்சத்தை அட்டவணைப்படுத்தியுள்ளது. மரபுக் கவிதையில் அமைந்துள்ள நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்