பட்டிமன்ற நடுவர், நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் திண்டுக்கல் லியோனி, தான் வளர்ந்த கதையை சொல்லும் நுால். தமிழ்நாடு பாடநுால் நிறுவனத் தலைவரான பின், தன்னைப் பற்றி நுால் எழுதினால் என்ன என தோன்றியதை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.
பள்ளிப்பருவம், ஆசிரியரானது, பேச்சாளரானது, பட்டிமன்ற நடுவரானது, அரசியல்வாதியானது என வெற்றிப் பயணத்தை எளிமையாக, நகைச்சுவையாக விளக்கியுள்ளார். பேச்சு மொழியிலே உள்ளது.
அவரது பேச்சில் வார்த்தை அலங்காரம் இருக்காது; இயல்பாக இருக்கும். எழுத்தும் அவ்வாறே உள்ளது. எளிய குடும்பத்தில் பிறந்தவரின் வாழ்க்கை மற்றும் வளர்ந்த கதை, படிப்போருக்கு தன்னம்பிக்கையை தரும்.
– ஜி.வி.ஆர்.