தமிழ் இசை பற்றி விரிவாக விளக்கும் நுால். தேவாரப் பாடலில் இசை பற்றி ஆராய்ந்து விளக்குகிறது. பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் என்று ஞானசம்பந்தர் கூறுவதை விளக்குகிறது.
தமிழ் மொழியின் வளமை, தொன்மை, தனித்தன்மை இசையால் அறியப்படுகிறது. திருக்குறளில் பண் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழை எவ்வாறு இசையோடு பாடுவது என்பதை சந்த நயத்தோடு விளக்குகிறது.
இசை நுணுக்கங்களை எடுத்துக் காட்டுடன் விளக்குகிறது. தேவாரப் பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து முற்றோதல் செய்வது, தமிழ் வேள்விச் சடங்கு செய்த பலன் ஏற்படும். பண்ணிசையில் பாடுவதால் ஆன்ம பலம் பெருகும். இசை பயில் வோருக்கும், இசையில் ஆய்வு செய்வோருக்கும் பயன்படும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்