மலையாள மொழியில் எழுதப்பட்ட அற்புதமான வரலாற்று நாவல். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருச்சி, பூக்குடியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் சூரஜ் மற்றும் தியாவை நாயகன், நாயகியாக கொண்டு கதை நகர்கிறது. மண் மணம் மாறாத காவிரிக் கரையில் துவங்கி, சேர நாட்டு தலைநகர் பத்மனாபபுரம் வழியாக, திருவாங்கூர் வரை கதையின் நீரோட்டம் செல்கிறது. பூக்குடி கிராமத்தின் வரலாற்று புதையலை தோண்டி எடுக்கிறது. பத்மனாபபுரம் அரண்மனையின் கம்பீரத்தை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. மூவேந்தர் காலத்து இசையை இனிமையுடன் பேசுகிறது.
காதல், இன்பம் கலந்தோடி, துயரத்தையும் பதிய வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதில் நிழலாடுகின்றன. தமிழகம், கேரளத்தின் வரலாற்று வாசனையை மண் மணம் மாறாமல் கூறும் நாவல்.
– டி.எஸ்.ராயன்