குழந்தைகளுக்கு நேரடியாக சொல்வது போல் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். விரும்பும் கருத்துக்களில் 100 கதைகள் உள்ளன. முதியவர்கள் மிகுந்த சுவாரசியமுடன், சிறுவர்களுக்கு சொல்லும் தோரணையுடன் உள்ளன கதைகள். இரண்டு மரம் என்ற தலைப்பில் துவங்கி, குருவும் சீடனும், திருடனின் கதை, குறுக்குப்பாதை என கவரும் விதமாக எழுதப்பட்டுள்ளன.
கதைகள் அறத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. கதையின் இறுதியில் அது அறிவுரையாக சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதைக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சித்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது, கதைக்கு பொருத்தமாக உள்ளது. அறிவுரை சொல்லும் எளிய குறுங்கதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்