வள்ளலாரின் அருட்பா பாடல்களை உள்வாங்கி, கருத்துகளை தெரிவிக்கும் நுால். விண்ணப்பக் கலிவெண்பாவாக வெளிப்படுத்துகிறது.
வள்ளலாரின் கொள்கைகளுள் மரணமிலாப் பெருவாழ்வும் ஒன்று. அதை, ‘நோன்பு கொண்டு உன்னை அடைய முயன்ற திருமாலுக்கும் எட்டாத தாமரை போன்ற திருவடி உடையவனே, நீ என்னை எமனுக்குக் காட்டிக் கொடுக்காதே’ என்று இறைஞ்சுவது, நமக்காகத்தான் என்ற தகவலைப் பதிவு செய்துள்ளது.
ஒவ்வொரு தலத்திலும் எழுந்தருளியுள்ள இறைவனின் அருள் செயல்களை குறிப்பிடுகிறது. அந்த தலத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.
திருத்தலங்களில் சிவபெருமான் அடியார்களுக்கு அருள் செய்த விதத்தை விரிவாக விளக்குகிறது.
– பேராசிரியர் இரா.நாராயணன்