நிதி நிறுவனம் நடத்தி பலரிடம் சுருட்டிய பணத்தில், 25 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு ரயிலில் ஆந்திராவிற்கு தப்புகிறது ஒரு தம்பதி. அந்த பணப்பை, நடுத்தர குடும்பத் தலைவி வசம் மாறி வந்து விடுகிறது.
வங்கியில் பணிபுரியும் அவரது மகள் மறைத்து வைக்கிறாள். அந்தப் பணத்தை என்ன செய்கிறாள் என ஒரு பக்கமாக கதை நகர்கிறது. மறுபக்கம், மோசடித்தம்பதியின் தலைமறைவு வாழ்க்கை, அப்போது ஏற்படும் பிரச்னையில் போலீசிடம் சிக்குவதன் மூலம் முடிவுக்கு வருகிறது.
பணத்தால் எதையும் சாதிக்கும் மோசடித் தம்பதி,போலீஸ் அதிகாரியை கொல்கிறது. தப்பிக்கும் முயற்சி தோல்வியுற, சிறையில் அடைக்கப்படுகிறது.
திருந்தாத தம்பதி பற்றிய நாவல்.
– சையத் அலி