குருவை வழிபட்டு இன்பமாக வாழ வழிகாட்டும் நுால். இரண்டு பெரிய அத்தியாயங்களாக உள்ளது.
ஆன்மிக அனுபவம், மனித மனம், வழிபாட்டு நெறிமுறைகள், கர்மயோகம், தேர்ந்தெடுக்கப்பட்ட பகவத் கீதையின் ஸ்லோகங்கள், தயானந்த சரஸ்வதி சுவாமிகள் குறிப்பிட்ட தகவல்களுக்கு விளக்கம் தருகிறது.
தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்து சனாதன தர்மம் பற்றியும், பக்தி, சிரத்தை பற்றியும் விளக்குகிறது. வாழ்க்கைக்கு பகவத் கீதையின் உபதேசங்கள் உதவுவதை கூறுகிறது. தியானம், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகளை விவரிக்கிறது. படிக்க வேண்டிய நுால்.
– புலவர் இரா.நாராயணன்