இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றுத் தகவல்களை திரட்டித் தரும் நுால். படைப்பிலக்கியம், இலக்கிய இயக்கத்தில் மாறி வரும் போக்கை விவரிக்கிறது.
இலங்கை தமிழ் இலக்கியத்தை உள்ளடக்கிய ஆவணமாக விளங்குகிறது. முதல் பாகத்தில் இலக்கிய நுால்கள் மீதான மதிப்புரை, விமர்சன பார்வையை பதிவு செய்துள்ளது.
தமிழியல் சிந்தனைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இலக்கியங்களை சமூகப் பண்பாட்டுக் களத்துடன் பொருத்திக் காட்டும் முயற்சி நடந்ததையும் விளக்குகிறது.
இரண்டாம் பாகத்தில் உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பப் போக்குகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. மொழி வரலாற்று ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு