இளம் வயதிலிருந்தே தெய்வங்களை வணங்கியதால் ஏற்பட்ட தாக்கத்தில் எழுதப்பட்ட நுால். தொழுது வந்த கடவுள்கள் பற்றி உள்ளத்தில் தோன்றிய சிந்தனைகள், பாடல்கள் வழியே வழங்கப்பட்டுள்ளன. இந்நுாலில், 90 தலைப்புகளில் விநாயகன், சிவன், முருகன், கண்ணன், திருமால் போன்ற பல தெய்வங்களை போற்றும் வகையில் கவிதைகள் உள்ளன.
ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு ராகம் உண்டு. அந்த ராகத்தை மிக எளிதாக உணர முடியும். இசை நயத்தோடு பாடல்களை வாசிக்கும்போது, மனதிலே எளிதாகப் பதிந்து விடுவதோடு, ஆத்ம சுகமும் கிடைத்து, இறையருள் பெறும் வாய்ப்பு உண்டாகும்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள், கவிதை ஆர்வலர்கள், தமிழ் சிந்தனையாளர்கள், சமுதாய நல்லிணக்க எண்ணம் கொண்டவர்கள் படித்து நலம் பெறலாம்.
– வி.விஷ்வா