கோவில் கூட்ட நெரிசலில் வரிசை நகராதா என ஏங்கும் பக்தனாக, ‘தாயே மீனாட்சி... சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டாயா...’ என கேட்க, அர்ச்சகர் வடிவில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்கிறாள் தாய்.
எழுத்தாளராய், அறிவாளியாய், எஜமானனாய் அவதாரம் எடுத்தாலும் அன்னை முன், பிள்ளை தான். பித்தனாய், பிதற்றலாய், கதறி அழத்தான் முடியும். கைவழி அமுதம் சுரந்து பிள்ளை வயிறை நிறைப்பது போல, வாழ்வில் நடந்த நிகழ்வு அன்னையின் அசைவாய் புரட்டி போடுகிறது.
தாய்க்கும், பிள்ளைக்குமான பந்தம், உள்ளார்ந்து அனுபவிக்க வேண்டியது. அதற்கு புத்தக வரிகளின் வழியே வித்தியாசமான அனுபவம் தருகிறது.
– எம்.எம்.ஜெ.