மொழிப் புலமையும், வாழ்வின் பக்குவமும் ஒருங்கே சேர்ந்து அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். உயிரின நேயம், மரபுக் கவிதைகளாக மிளிர்ந்துள்ளன. நீ இன்றேல், ஏந்திழையே, அமுதினியே போன்ற கவிதைகளில், அறம் தாண்டாத காதல் சொல்லப்பட்டுள்ளது.
உயர்வை நல்கும், அழகின் சிரிப்பாய், நன்முத்தாய், வளமும் பெருகும், நற்குடியில் பிறந்தவர், நெஞ்சங் களிக்கும் போன்ற கவிதைகளில் மாண்பு வெளிப்படுகிறது. வள்ளலாரின் முழு வாழ்க்கை வரலாற்றையும் மிகச் சுருக்கமாகவும், சுவையாகவும் தொகுத்துள்ளார். ஆன்மிக அன்பர்கள் பயன் பெற உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
– மேதகன்