மொழியின் செறிவையும், மகத்துவத்தையும் அறிய உதவுபவை மரபுக் கவிதைகள். அந்த வகையில் காதல், அறம், புகழ் என பலதரப்பட்ட உணர்வுகள், கவிதைகளாக்கப்பட்டுள்ளன. கற்றறிந்த புலவன் ஒருவர் தன் காதலியிடம் முத்தம் கேட்கும் விதத்தை, ‘கொடுக்கல் வாங்கல்’ கவிதையிலும், காதலியின் சிறுபார்வை கூர்வாளாய் அறுத்தொழிப்பதை, ‘பொற்குழலி’ கவிதையிலும், இவர் சொல்லியிருக்கும் நயம் அழகு.
கல்வியின் மேன்மை, பாரதியின் பெருமை, உவகை நிலைக்க வழி, உறவுப் பேணல் போன்ற கருத்துகளை முன்வைத்து, 60 கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இலக்கணத்திற்கு இணங்கி எழுதப்பட்ட இந்தப் புத்தகம், கவிதைகளோடு சேர்த்து பைந்தமிழ் சொற்களை அறிமுகம் செய்கிறது.
– சையத் அலி