வேதாரண்யம் பகுதியில், 1965களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். சிறையில் உள்ள கதிரேசனும், ஆசிரியர் ஒருவரும், தாங்கள் என்ன குற்றத்திற்காக ‘உள்ளே’ வந்தோம் என்பதை விவரிப்பதில் துவங்குகிறது கதை. அதீத செல்லத்தாலும், செல்வத்தாலும் வழிகெட்ட வாலிபன், சமூகத்தால் முகஞ்சுழிக்கக் கூடிய செயல்களில் ஈடுபட்டு, உறவுகளைத் தொலைக்கிறான்.
இவனது தவறுகள், குடும்பத்தை பாதிக்கிறது. ஆத்திரத்தில் அதற்குப் பழிவாங்க மேற்கொண்ட செயல், மொத்தமாய் மாய்த்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு தள்ளுகிறது.
அதேபோல், எதற்கும் கட்டுப்படாமல் வம்பு செயல்களில் ஈடுபட்டுவரும் வாலிபர் பட்டாளத்தை திருத்த நினைக்கும் ஆசிரியரின் செயல், அவருக்கே எப்படி ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை பின்னிச் சொல்கிறது இந்நாவல்.
– மேதகன்