தாய், மொழி, கடவுள், காதல், குடும்பம், குரு, பேறு என தன் உள்ளத்தில் தோன்றியதை எல்லாம் தமிழின் துணைகொண்டு கவிதையாக இறக்கி வைத்துள்ள நுால். மொத்தம், நுாற்றுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைகள் உள்ளன.
‘தினமும் சரியாய் யோசி, நான் வளர்த்த தென்னை, வானவில், வாழை, விலங்குகள், சிறகை விரித்து, காந்தி, நேரு, வ.உ.சி., காமராஜர், பேண வேண்டும், தேர்த் திருவிழா, நிறங்கள் இறைவன் தந்த வரங்கள்’ போன்ற கவிதைகள், சிறார் பாடல்கள் வகை.
எளிய மொழியில், சந்த நடையில் எழுதப்பட்ட பாக்கள், ஆழமாய் பதிகிறது. குழம்பும் நினைவுகள், மனை மாட்சி, எழுதாத கவிதை, எவரிடம் மன்னிப்பு’ போன்ற கவிதைகள் பொருள் ஆழம் கொண்டுள்ளன.
– பெருந்துறையான்-