பல்வேறு தமிழ் இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உயிரினங்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து தகவல்களை தருகிறது.
பூச்சியினங்கள் மற்றும் ஊர்வன பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. முதலில் ஆக்காட்டி என்ற பறவையினம் பற்றிய தகவல் படத்துடன் உள்ளது. அந்த பறவை பற்றி சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள், வாய்மொழி மரபில் அது பற்றிய பாடல்கள் மற்றும் அதன் நடத்தைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இது போல், பல்வேறு பொருள்களில், 18 கட்டுரைகள் உள்ளன. வரலாற்று பின்னணியுடன் அறிவியல் ரீதியாக ஆய்வுகள் நடத்தி கண்ட முடிவுகள் தரப்பட்டுள்ளன. உயிரினங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை தரும் நுால்.
– ராம்