ஆழ்வார்கள் பாசுரங்களின் அழகு, உணர்வுக்கு தமிழ் மரபே உரமாக அமைந்துள்ளதாக உரைக்கும் நுால். அகத்திணை மரபின் தொடர்ச்சியை தலைவன், தலைவியிடம் உணர்த்தியதாக அமைந்த நம்மாழ்வார் பாசுரத்தில் காண முடிவதை கூறுகிறது.
நம்மாழ்வார், ‘மடலுார்தல்’ என்ற அகத்துறையில் பாசுரம் பாடியுள்ளார். எட்டு ஆழ்வார்களும் அந்தாதி அமைப்பில் இலக்கியம் படைத்துள்ளனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
குறள் அமுத கருத்துகள், ஆழ்வார்கள் பாசுரங்களில் நிறைந்து இருப்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அஷ்ட பிரபந்த பாடல்கள் தமிழ்ப் புலமைக்கு ஊற்றுக் கண்ணாக விளங்குவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் இலக்கிய மரபோடு இசை மரபும் உணர்ந்தவர்கள் என்பதைப் பறைசாற்றும் நுால்.
– புலவர் சு.மதியழகன்