இயற்கை, மனித மனங்கள், வளர்ச்சி போன்றவற்றை, 69 தலைப்புகளில் கூறும் கவிதை தொகுப்பு. தாயின் பிரசவ வலியை, குழந்தை அழுகையில் வெளிப்பாடாக காட்டுகிறது.
ராகத்தின் மொழியை சுட்டிக் காட்டுகிறது. ரத்த வங்கி அருகில் கொசுக்கள் படையெடுப்பது எதற்காக என கேட்கிறது. வேதனையும், சோதனையும் இல்லாமல் கிடைக்கும் சாதனை அர்த்தம் கொண்டதாக இருக்காது என கூறுகிறது.
புகை, சாம்பலாக்கி எமனுக்கு விருந்தாக்கும் என எச்சரிக்கை உணர்வை கொடுக்கிறது. மிட்டாய்கள், வண்ண ஜாலம் கொண்டு கவர்ந்து இழுப்பதை சொல்கிறது. மெழுகுவர்த்தியில் தொலைத்த வாழ்க்கையை தேடச் சொல்கிறது. ஒவ்வொரு கவிதையும், வாழ்வியல் அர்த்தம் கொண்டது.
– டி.எஸ்.ராயன்