மத நல்லிணக்கம் என்பதை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள புதினம். ஏதிலியாக காப்பகத்தில் வளர்ந்த சூசன், மருந்து விற்பனை முகவராக வரும் ராஜகோபால் இருவரும் மருத்துவ முகாமில் சந்திக்கின்றனர். சேவை மனப்பான்மையே இரு உள்ளங்களையும் இணைக்கிறது.
பெற்றோர் மற்றும் கருணை இல்ல காப்பாளர் சம்மதத்தோடு திருமணம் நடக்கிறது. மதம் மாறி மணம் புரிந்தவர்கள் கணவன் மதத்திற்கோ, மனைவி மதத்திற்கோ மாறி விடுவர்.
ஆனால் அவரவர் மத நம்பிக்கை களோடு உறவினர்களைச் சார்ந்து வாழ்வதாக சித்தரித்திருப்பது நல்லிணக்கத்தில் உச்சம் எனலாம். ராஜகோபாலன் மனைவி நினைவும், நினைவு நுாலகமும், மண்ணில் ஈரமும் அன்பும் நிலைத்திருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது.
– புலவர் சு.மதியழகன்