பொருந்தாத காதலை மிகவும் விரிவாக எடுத்துரைக்கும் நாவல். நிகழ்வுகளை சிந்திப்பதும் இணைந்து நடனமாடி இருந்தாலும், காதலன் மீது ஆர்வம் இல்லை என்பதை புதுத்தடம் பிடித்து செல்கிறது. பாலினச் சிக்கல்களை ஆழமாக அலசுகிறது.
கணவனை சந்தித்தது நிகழ்வுகளை சிந்தித்துக் கொண்டிருப்பது போலவே பொருந்தாக் காதலனை சந்தித்தது பற்றியும் சிந்திக்கிறாள் பெண். இறுதியில் கணவன் இறந்த நிலையில் தந்தையை தேடிச் செல்லும் போது, செய்த தவறுகளை நினைத்து வருந்துவதாக அமைந்துள்ளது. பிறக்கப் போகும் குழந்தையை, இந்தத் தவறுகளை செய்யாமல் வளர்க்க முயற்சிக்கும் நினைவுடன் நிறைவடைகிறது.
பிரெஞ்ச் கலாசார சாயலுடன் அமைந்துள்ள நாவல்.
– முகிலை ராசபாண்டியன்