முகப்பு » வாழ்க்கை வரலாறு » மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்

விலைரூ.325

ஆசிரியர் : எப்.வில்லியம் ஆண்ட்ரூஸ்

வெளியீடு: செல்லம் பிரான்சிஸ் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கை அனுபவங்களை இன்றைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு அசை போட்டு எழுதப்பட்டுள்ள நுால். சினிமா தியேட்டர், வானொலியின் வரவு, கையால் எழுதிய கடிதங்கள், தொலைபேசியின் வளர்ச்சி போன்றவற்றை சுவாரசியம் குறையாமல் சொல்கிறது.

‘டூரிங் டாக்கீஸ்’ என துவங்கி, 33 அத்தியாயங்களில் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்துள்ளது. பெரும்பாலும் தொழில் நுட்பங்களின் வருகையால் வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சி, அவற்றின் வளர்ச்சி குறித்த பார்வையுடன் உள்ளது.

எளிய நடையில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தெளிவுபடுத்துகிறது. கருப்பு வெள்ளையாய் கண்டவற்றை, வண்ணத்தில் பார்த்த போது ஏற்பட்ட மன உணர்வை வெளிப்படுத்தும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us