அன்பு, அற வழியை போதித்த புத்தரின் அற உரைகளின் எளிய நடை கவிதை தொகுப்பு நுால். அரச குடும்பத்தைச் சேர்ந்த புத்தர், எந்த இழிவான செயலுக்கோ, துன்பத்திற்கோ ஆளாகாதவர். ஆனால், மக்களின் துன்பத்தை போக்கி, அறியாமையை விலக்கும் உயர்ந்த நோக்கத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்கிறது.
புத்தரின் அறிவுரைகள், ஒரு அழகிய கலை, அற்புத அறிவியல், பண்பின் ஊற்று, பகுத்தறிவு பெட்டகம் என கூறுகிறது. மோட்சம் பெற, உலக மதங்கள் கூறும் நிபந்தனையை விவரிக்கிறது. சமுதாயம், நல்லவரை விரும்புவதை போல், சமத்துவத்தை போதிக்காத எந்த மதமும் ஏற்புடையதல்ல என புத்தர் வாதிட்டதை கூறுகிறது. ஒவ்வொரு கவிதையும் புத்தரின் அறிவுரையை விவரிக்கிறது.
– -டி.எஸ்.ராயன்