பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம். பிரிக்கிட் பியன் என்ற பெண் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. குடும்பச் சிக்கலுக்குள் பயணிக்கிறது.
ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் எப்படிப்பட்ட உடையுடன் காணப்படுவார், எப்படிப்பட்ட கண்டிப்புடன் இருப்பார் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆசிரியரின் கண்டிப்பான நடவடிக்கை, மாணவர்களின் உள்ளத்தை பாதிக்கும் தன்மையை தெரிவித்துள்ளார். அதிகப்படியான கண்டிப்பு, மாணவனின் படிப்பை பாதிக்கும் என்பதை மிக நுட்பமாக உணர்த்துகிறது.
உரையாடல்களில் பாசத்தை விடவும் பாசாங்கு அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. தடுமாற்றத்தை சமாளித்து முன்னோக்கிய கருத்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்