பைந்தமிழில் பாண்டித்தியம் பெறாதோரும் கம்பராமாயணக் கதையை முழுமையாக அறிந்து கொள்ள, பழகு தமிழில் எளிய நடையில் உரைநடை வடிவில் அமைந்துள்ள நுால்.
ஒவ்வொரு காண்டத்தின் கதை சுருக்கமும், பாத்திரப் படைப்புகளும், புராண நிகழ்வுகளும் சுவை குன்றாது நயம்பட விளக்கப்பட்டு உள்ளன.
புகழ்பெற்ற கற்கண்டு பாடல்கள் எல்லாம் இடையிடையே தரப்பட்டுள்ளன. கம்பனைப் பற்றிய குறிப்புகளுடன், ராமாயணத்தில் வரும் அனைத்து கதை மாந்தர்களும் அகர வரிசையில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
நிறைவாக ராமாயணக் கதை நிகழ்வுகளை சுருக்கமாக, 28 பாடல்களில் கம்பர் வடித்த குட்டி கம்ப ராமாயணமும் இடம் பெற்றுள்ளது. கைவிளக்காக உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்