பக்தர்கள் அன்பளிப்பாக அளித்த நிலத்தில் அமைந்த கோவில் வரலாற்றை கூறும் நுால். வழிபாட்டுக் குழு அமைத்து செவ்வனே நடைபெறும் விதம் தரப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் விழாக்கள் குறித்த தகவல்களும் உண்டு.
முழுதும் பக்தி மணம் கமழுகிறது. தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் தரப்பட்டுள்ளன. வேண்டுகோள், பிரார்த்தனை என்று அமைந்துள்ளது. விநாயகர் அகவல் துவங்கி, விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதியுடன் வழிபாட்டு பாடல்கள் அடங்கி உள்ளது. விநாயகர் துதி துவங்கி, சண்டீசர் துதியுடன் நிறைவடைகிறது. வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்ய துணை செய்யும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்