மன்னர் ராஜராஜ சோழன் நிர்வாகம், நீதி, பக்தியை பேசும் நுால்.
ஆட்சி நடத்தி 1,000 ஆண்டு கடந்த பின்னும், தமிழர் மனதில் நீங்கா இடம் பிடித்தது பற்றி அலசுகிறது. நாடு கடந்தும் புகழ் பரப்பியதன் அவசியத்தை கூறுகிறது. சாதனைகள் மட்டுமின்றி, கீழ்நிலையில் சேவை புரிந்தவர்களையும், கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தது குறித்து பேசுகிறது.
அன்றைய அரண்மனை வடிவம், இன்றைய கட்டடக் கலைக்கு ஆதாரமாக உள்ளது பற்றி கூறுகிறது. மன்னனின் படைபலம், நிர்வாகம் இன்றைய ராணுவ நடவடிக்கைகளுடன் ஒத்துபோக வைக்கிறது. தஞ்சை கோவிலின் மகத்துவத்தை, அழகு மிளிர்வதை குலையாமல் வர்ணிக்கிறது. ராஜராஜ சோழனின் சரித்திரத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– -டி.எஸ்.ராயன்