கலை என்பது கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஊடகம் என உணர்த்தும் நுால். நாட்டுப்புறக் கலைகள் பற்றி, 42 தலைப்புகளில் விவரிக்கிறது.
மக்கள் வாழ்வு, மரபில் உருவான அடையாளத்தைக் கூறுகிறது. கோலாட்டம், வில்லுப்பாட்டு, காவடியாட்டம், பாம்பு ஆட்டம், புலி ஆட்டம், தேவராட்டம், சேவையாட்டம், காளியாட்டம், சாட்டை அடி ஆட்டம் குறித்த கருத்துக்களை முன்வைக்கிறது.
சங்க காலத்தில் குறிப்பிடும், ‘பிந்தேறு குருவை’ ஆட்டத்திற்கு சமமானது, சேவையாட்டம் என்கிறது. தேவதுந்துபி, சேமப்பலகை, சேமக்கலம், ஜால்ரா என்ற இசைக் கருவிகள் பற்றி சொல்கிறது. கலை ஆய்வாளர்களுக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்