தமிழர் மனதில் உயர்ந்து நிற்கும் கவிஞர் மற்றும் எழுத்தாளர்களை போற்றி பாடும் மரபு கவிதைகளின் தொகுப்பு நுால்.
மகாகவி பாரதியார் துவங்கி, கவிக்கோ அப்துல் ரகுமான் வரை, 15 ஆசான்கள் பற்றி உள்ளது. கவிமணி, பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், உடுமலை நாராயணகவி, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, பெரியசாமி துாரன் பற்றி பாடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கவிஞரின் புகழ்பெற்ற பாடுபொருள்கள், செயல்பாடுகளை இனிய மரபுக் கவிதைகளாக படைத்துள்ளது. மறைந்த கவிஞர்களை மனதில் நிறுத்தும் முயற்சியாக மலர்ந்துள்ள நுால்.
– ராம்