மனிதனுக்கு உதவும் பனை மரக் காட்டோடு பின்னிப் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல். கிராமத்து முதிய பெண்ணின் பண்பாட்டை, மண் வாசனையுடன் விவரிக்கிறது. ஒரு ரூபாய்க்கு இரண்டு பனங்கிழங்கு வீதம் தினமும் விற்பாள். சில நேரம் ஒரு கிழங்கை சேர்த்து இனமாக வழங்குவாள்.
பந்தி பரிமாறும் முன், உப்பை வைக்க வேண்டும் என்ற வரிகளில் மண் மணக்கிறது. கிராமத்து விடலைப் பருவத்து காதலை அற்புதமாக விவரித்துள்ளது. எலும்பு உருக்கும் நோய் போல நெஞ்சு உருக்கும் நோய் என்றால் காதல் தான். ஜெயித்தால் அது தீர்ந்து விடும்; தோற்றால் தொடர்ந்து வரும்.
ஜீவன் உள்ள வரிகள். மண் கொள்ளை, மரங்களின் கொள்ளை என்ற, நாட்டில் உள்ள நடப்புகளை விவரிக்கும் விதமும் அற்புதம். மண் மணக்கும் நாவல்.
– சீத்தலைச் சாத்தன்