வாழ்வின் நிகழ்வுகளை சுவாரசியமாக அணுகும் அறம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத முரண்கள், சிக்கல்கள், சமூக அவலங்கள், இலக்கியக் குறிப்புகளுடன் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.
கற்றது கைம்மண் அளவே என்பதை உதாரணங்களோடு உணர்த்தி, கல்வி விற்பனைப் பொருளாகி விட்டதை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகிறது.
வாரணாசி இலக்கியக் கருத்தரங்கில் கண்ட அவலம், வாடகைக்கார் ஓட்டி சம்பாதிக்கும் இளைஞனின் உழைப்பு, தாமதமாக பள்ளி வரும் மாணவனை திருப்பி அனுப்பும் தண்டனை தரும் எதிர்விளைவு என பல பொருண்மைகளை சுற்றி நகர்கிறது.
திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், தனிப்பாடல்களில் இருந்து இலக்கிய மேற்கோள்கள் காட்டி சுவாரசியமான விளக்கம் தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு