சமகால அரசியல், சமூக நிகழ்வுகளின் விமர்சனமாக மலர்ந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சரி, தவறு என எதையும் முடிவாக தீர்வுகளை சொல்லாமல். எது சரியான பார்வை என்பதை வெளிப்படுத்துகிறது.
திரைப்பட அலசல் போல் துவங்குகிறது ஒரு கட்டுரை. அது பெண்ணுரிமையை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது. ஒருவரின் காதல் தொடர்பான கருத்தை, மற்றொருவர் பார்வையில் விளக்குவது அறிவுலகத்திற்குப் பொருந்தாது என்கிறது.
தங்கு தடையற்ற மொழி நடையில் உள்ளது. சார்பு நிலை இன்றி அலசி கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. ஒரு நீதிபதி, ‘எனக்கும் ஹிந்தி தெரியாது’ என சொல்வதை அறிவு பூர்வ பார்வையுடன் அணுகுகிறது. சமகால அரசியல் நிகழ்வுகளை விமர்சனமாக அணுகும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்