குமரிக் கண்டத்தை களமாகக் கொண்டுள்ள நாவல் நுால்.
சோழ நாயகன் உதிரன், கொற்கை முகத்துவாரத்தில் முத்து குளிக்கச் செல்கிறான். அரிதிற் கிடைத்த சிப்பியில் விலைமதிப்பில்லாத ஊதா முத்துக்களை, கனவுக் கன்னிக்காக பத்திரப்படுத்தி கொள்கிறான். நண்பன் குவித்திரனுடன் காதலியைத் தேடி செல்கிறான்.
வழியில் சிப்பியை பறிகொடுக்கிறான். அதை நண்பனின் காதலி மீட்டு தருகிறாள். மகிழ்ந்து கனவுக் கன்னியை தேடி பாண்டிய நாடு செல்கிறான். விலங்குகளை வசப்படுத்தும் மணித்திரள் மூலிகையால் யாளி என்ற வினோத விலங்கு பற்றி அறிகிறான். அதை அடக்கியாள குமரிக் கண்டம் நோக்கி செல்வதாக உள்ளது கதை.
யாளியை அடக்கி அவன் ஆண்டானா என்பது பற்றி விவரிகிறது. சுவை குன்றாது எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம்.
– புலவர் சு.மதியழகன்