எளிய நடையில் குடும்ப பின்னணியுடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
சொந்த வீடு கட்டி குடிபோயினர். பழைய வாடகை வீட்டில் அக்கம் பக்கம் எல்லாம் நெருக்கம். புதிய இடம் புதிய சூழல். அப்பாவும், பிள்ளைகளும் வேலைக்கு போய்விட, வீட்டுத் தலைவிக்கு தனிமை.
வீட்டுத் தோட்டத்து ரோஜா மூலம், அடுத்த வீட்டுப் பெண்களோடு நெருக்கத்தை உண்டாக்குகிறான் மகன். கதை பசுமையாக உள்ளது.
உறவில் வசதி மிக்கவர் வீட்டு திருமணத்திற்கு போய் உதாசீனப்படுத்தப்பட்டவர்களுக்கு பக்கத்து வீட்டு பாட்டியின் நெருக்கம் உண்மையில் நட்புக்கும், உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டுகிறது. வித்தியாசமான கருவை உடைய கதைகள் சிறப்பாக உள்ளன.
– சீத்தலைச் சாத்தன்