குறும்பா என்ற கவிதைகளின் தொகுப்பு நுால். முத்தாய்ப்பாக பளிச்சென்று மனதில் பதியும் கருத்துக்களை உடையது. பல்வேறு தலைப்புகளில், 200 கவிதைகள் உள்ளன.
ஒவ்வொரு கவிதையும் வித்தியாசமான தலைப்புகளை கொண்டுள்ளன. கற்புடன் காவல் துறை என்ற தலைப்பில், ‘கையூட்டு ஒழிப்புக் காவலர் கற்புடன் செயல்பட்டால் கயவர்கள் அழிவர்’ என்று கூறுகிறது.
வெற்றியை முன் வைத்து வென்றிட என்ற தலைப்பில், ‘தடைகள் முன்னின்று தடுத்து நிறுத்தப் பார்க்குமுனை தயங்காமல் தாண்டு நீ’ என மலர்ந்துள்ளது. நேர்மை பற்றி, ‘நேர்மை என்பதென்றும் நிஜம் முகம் பார்க்கும் கண்ணாடி நீயதுவாகவேயிரு’ என முகம் காட்டி சிந்திக்க வைக்கிறது. எளிமையாக பொருளை உணர்த்தும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்