விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை வரிசைப்படுத்தி தரும் நுால். வரலாற்றுச் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஸ்கோடகாமா இந்தியாவில் நுழைந்த, 17ம் நுாற்றாண்டில் விடுதலைப் போர் உக்கிரம் அடைந்து விட்டதாகக் கூறுகிறது. மதங்கள் கடந்து நடந்த விடுதலைப்போர் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
ஆங்கிலேயரை எதிர்ப்பதில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. கட்டபொம்மன், பூலித்தேவன் படைகளில் எண்ணற்ற முஸ்லிம் வீரர்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்றது முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வரலாற்றில் தகவல்களை உள்ளடக்கிய நுால். ஆய்வு நோக்கில் படிக்கலாம்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு