ஆன்மிக தலங்களுக்கு பயணம் செய்ய துாண்டும் நுால். உடலைத் தாங்கி நிற்பதால் பெண் சுமைதாங்கி ஆவாள். கர்ப்பிணி ஆனவுடன் இரண்டு சுமைதாங்கியாகிறாள். இந்த கருத்து, கற்பனையின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.
பெண்மையைப் போற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளது. உழைத்து உண் என்று மேன்மையைச் சுட்டுகிறது. நுாலகப் பயன் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது. குடி குடியைக் கெடுக்கும் என பதிவிட்டுள்ளது. இயற்கை, காதல், திருக்குறளின் சிறப்புகளை குறுங்கவிதையில் கூறுகிறது. உலகியல், வாழ்வியல் பற்றி உயர்ந்த கருத்துக்களை விளக்குகிறது. கொரோனாவை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்கிறது. வன்முறையை வேரறுக்கும் சமுதாய நன்மைகள் நிரம்பிய நுால். கவிதை எழுத முயல்வோருக்கு உதவும்.
– புலவர் இரா.நாராயணன்