பல்வேறு பொருள்களில் எழுதப்பட்ட குறும்பா என்ற வகைப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 200 பாக்களை உடையது. தாயன்பு, சோதனை, பொறுமை, மகாத்மா போன்ற தலைப்புகளில் அமைந்துள்ளன. காகிதப் பூக்கள் என்ற தலைப்பில் அமைந்த கவிதையில், ‘தேர்தலில் வெற்றி பெற தீர்க்கமாய் உன்னுறுதி மொழியென் தெளிவாகவே மக்கள்’ என அழகிய கருத்தை பேசுகிறது.
காத்திடு என்ற தலைப்பில், ‘கலாசார கொலைகளால் கலையும் வேற்றுமையில் ஒற்றுமை காத்திடு இந்தியத்தை’ என அறைகூவல் விடுக்கிறது. சுப்பையா என்ற தலைப்பில், ‘வெள்ளை ஓநாய்களை வெட்டிச்சாய்க்க வீரவாளேந்திய விவேக சித்தன் பாரதி’ என மேன்மையாக புகழ்கிறது. கூர்மையான சிந்தனைகளை எளிய வரிகளில் வெளிப்படுத்தும் நுால்.
– மதி