அக்னி புராணம் தான் வன்னிய புராணம் என நிறுவி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வன்னியர் பற்றிய புராணக் கருத்துகளுக்கு விடை தரும் வகையில் அமைந்துள்ளது. வன்னியர் வரலாறு, போர்த்திறன் பற்றியும் விளக்குகிறது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஏற்ற வண்ண ஓவிய படங்கள் மெருகூட்டுகின்றன.
பிராமணர்கள், வைசியர், சூத்திரரை பாதுகாப்பது ஷத்திரியர் கடமை என பதிவு செய்துள்ளது. பரசுராமர், விசுவாமித்திரர், ரிஷிகள், வன்னியர் இடையிலான தொடர்புகள் விளக்கப் பட்டுள்ளன.
வாதாபி என்ற அசுரன் பெற்ற வரங்கள், அகத்தியர் காவிரியைக் கொணர்ந்தது, வன்னிய ராஜனின் ஆட்சி என்று நாவலைப் போல விரிந்து செல்கிறது.
வன்னியர் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்