பக்தி என்பது படைத்த கடவுளிடம் பாசம், அன்பு கொள்வது என்று துவங்கும் நுால். பக்தியின் பல நிலைகளை கதைகளாக விளக்கியுள்ளது.
விநாயகர் மீது பக்தி கொண்ட நம்பியாண்டார் நம்பி பற்றி கூறுகிறது. முருகன் தோற்றம், குமரகுருபரர், முசுகுந்தர் போன்ற அடியார்கள் அருள் பெற்ற விதம் அருமையாக சொல்லப்பட்டுள்ளது.
சிவன் அருளாளர்கள் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாளைப்போவார், நந்தனார், வேடர் கண்ணப்பர் பக்தி விளக்கப்பட்டு உள்ளது.
அருளாளர்கள் பாடிய கீர்த்தனைகள் ராகம், தாளத்தோடு தரப்பட்டுள்ளன. பக்தி இசையில் ஆர்வம் உள்ளவர் படிக்க வேண்டிய நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்