நாக புராணம் பற்றி அறிய உதவி புரியும் நுால். கருட புராணம், மகாபாரதம் மற்றும் சிலவற்றை ஆதாரமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
வாசிப்பவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படாத வகையில் புரியும் வண்ணம் எளிய நடையில் தெளிவாகத் தருகிறது. புராணங்கள், இதிகாசங்கள் பலவற்றையும் ஆராய்ந்து நாகங்களை பற்றிய சங்கதிகளையும், கருடன் உருவான குறிப்புகளையும் சுவைபட அளிக்கிறது.
சப்த ரிஷிகளில் ஒருவரான காசியபர் மூலமே நாகர் இனம் தோன்றியது என குறிப்பிடுகிறது. நாகர்- – நாகினியின் தோற்றம், சக்தி குறித்தும், இந்திரலோகத்தில் கருடன் பெற்ற ஆசிகளும் அதன் சிறப்பியல்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்கள் வாசகர்களை குழப்பி விடாமல் இருக்க அளவுடன் தரப்பட்டுள்ளது.
– வி.விஷ்வா