நாட்டு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். காந்திஜி, ஜவஹர்லால் நேரு, கவிஞர்கள் ரவீந்திரநாத் தாகூர், பாரதியின் நாட்டுப்பற்று பற்றி எல்லாம் வியந்து புனையப்பட்டுள்ளது.
மூவர்ணக்கொடி உயர்த்துவோம், சத்தியமே ஜெயம் போன்ற தலைப்புகளில் நாட்டு முன்னற்றத்தை பாடல்களாக பதிவு செய்துள்ளது. ‘சத்தியம் என்றும் ஜெயமாகும் – நல் சாந்தம் எந்நாளும் உலகாளும்’ என எளிமையான கருத்தை பதிய வைக்கிறது. சுதந்திரம் பெற்றதை, ‘வெஞ்சமர் இல்லை இல்லை வேலுடன் வாளும் இல்லை; அஞ்சிடும் செயல்கள் இல்லை ஆனந்தம் ஒன்றே எல்லை; துஞ்சிடும் துயரை மாற்ற துணையென்றே வந்த நன்னாள் சுதந்திர திருநாளாகும்’ என்று பறை சாற்றுகிறது. நாட்டுநலனில் அக்கறையுடன் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நுால்.
– ஒளி