பரதவர் பற்றி கொற்றவை நாவல் வழியே ஆய்வு செய்துள்ள நுால். இலக்கியத்தில் பதிவுகள், உறையுள், மீன்பிடி முறை, தொழில்நுட்பம், வழிபாடு, பொழுதுபோக்கு, சடங்கு என தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
உலகமயமாக்கல், கடல் மாசு, அண்டை நாட்டு கடற்படை, கட்டாய இடப்பெயர்வால் பரதவ மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு, பாதிப்பு குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலைகளின் வகைகள், பிடிபடும் மீன்கள், தோணி தயாரிப்பு, கடைப்பிடிக்கும் சமூக சடங்கு குறித்த தகவல்களை உடைய நுால்.